ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இளம் மாடல் அழகி ஒருவர் பிரபலமான ஒரு ஹோட்டலின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து போலீசார் நடத்திய பல்வேறு கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வருவாய்த் துறை அமைச்சரான ராம்லால் ஜாட்டை குறிப்பிட்ட அந்த மாடல் அழகியை வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்ட ஒரு சாரார் முயற்சி செய்துள்ளனர். அந்த மாடல் அழகி அதற்கு ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் அந்த மாடல் அழகியை மிரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில வருவாய் துறை அமைச்சர் ராம் லால் ஜாட் கூறியதாவது, “நான் பில்வாராவில் இருந்தபோது ரிப்போர்ட்டர் என கூறிக்கொண்டு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் என மூன்று பேர் என்னை சந்திக்க வந்தனர். அவர்கள் சில ஆவணங்களை காட்டி இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கும்படி என்னிடம் கேட்டனர். ஆனால் நான் இது என் துறை சார்ந்தது அல்ல எனக் கூறி மறுத்து விட்டேன். நான் இதற்கு முன்னர் அவர்களை பார்த்தது கூட இல்லை நான் உதவி செய்ய மறுப்பு தெரிவித்த பிறகு அவர்கள் வெளியேறிவிட்டனர்”. என அவர் கூறினார். வெளியேறிய அவர்கள் ஒரு மாடல் அழகியை அழைத்து அவரை போட்டோ ஷூட் எடுப்பதாக கூறி பல்வேறு கோணங்களிலும் புகைப்படம் எடுத்துள்ளனர்.
அதோடு அவரை குளிக்க வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர். அதனை எல்லாம் காட்டி மாடல் அழகியை அமைச்சரிடம் எப்படியாவது ஆவணங்களில் கையெழுத்து வாங்கி விட வேண்டும் என கூறி மிரட்டியுள்ளனர். இதற்கு மாடல் அழகி மறுப்பு தெரிவிக்கவே மன உளைச்சலுக்கு ஆளான மாடல் அழகி ஹோட்டலில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றது தெரிய வந்துள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.