சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள குத்தாலம் அய்யனார் கோவில் தெருவில் கொத்தனாரான சுரேந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியை காதலித்து, அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி அடிக்கடி தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுரேந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.