Categories
உலக செய்திகள்

மியான்மரா…? வேண்டவே வேண்டாம்…. .ஒதுக்கி வைத்த “மாநாடு”…. எதுக்குன்னு தெரியுமா?….!!

நடப்பு மாதத்தின் 16 மற்றும் 17 ஆம் தேதியில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் மியான்மர் வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

மியான்மர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கவிழ்த்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு மக்கள் பலரும் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களை மியான்மர் ராணுவம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியுள்ளது.

இந்த போராட்டத்தில் 1,500 க்கும் மேலான அப்பாவி பொது மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் நடப்பு மாதத்தின் 16 மற்றும் 17 ஆம் தேதியில் நடைபெறவுள்ள ஆசியான் என்ற தெற்காசிய நாடுகளில் கூட்டமைப்பு மாநாட்டில் மியான்மர் வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |