Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

டாஸ்மார்க் ஊழியருக்கு சொந்தமானது…. ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. போலீஸ் விசாரணை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 3 லட்சத்து 2 ஆயிரத்து 140 ரூபாயை பணத்தை   காவல்துறையினர்   பறிமுதல்  செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரம் சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அந்த சோதனையில் டாஸ்மார்க் மேற்பார்வையாளரான  மாரிமுத்து என்பவர் உரிய ஆவணம் இன்றி 3 லட்சத்து 2 ஆயிரத்து 140 ரூபாய் பணத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்தப் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |