Categories
மாநில செய்திகள்

BREAKING: நடிகர் விஜய்யுடன் முதல்வர் சந்திப்பு…. பரபரப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய்யை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, விஜய்யை சந்தித்து பேசியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ரங்கசாமி தரப்பினர் தெரிவித்துள்ளனர். தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |