Categories
உலக செய்திகள்

“பலுசிஸ்தானில் தீவிரவாதிகள் அட்டகாசம்”…. 15 பேர் சுட்டுக்கொலை…. 4 இராணுவ வீரர்கள் பலி….!!

பலுசிஸ்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இராணுவதினரால் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.   

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தனக்கென தனி நாடு வேண்டும் என்று பலுசிஸ்தான் மாநிலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் இயற்கை வளங்கள் மிகுந்து காணப்படுவதால் சீனாவின் பட்டுப்பாதை திட்டம் அமல்படுத்துவதற்கு தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தீவிரவாதிகள் நேற்று முந்தினம் இரவு பலுசிஸ்தான் மாநிலத்திலுள்ள நோஸ்கி, பஞ்கர் மாவட்டங்களில் இராணுவ முகாமிற்குள் நுழைய முயன்று உள்ளனர். அதனை பார்த்த இராணுவத்தினர் விரைந்து செயல்பட்டு தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலைத் தொடங்கினார்கள்.இராணுவ வீரர்கள் விவேகத்துடன் செயல்பட்டதால் தீவிரவாதிகளின் தாக்குதல் தடுக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளுக்கு எதிராக இரண்டு இடங்களில் இராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5 பேர் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பலுசிஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தீவிரவாத அமைப்பான ‘விடுதலைப் படை’  பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ராஷித் வீடியோ மூலம் வெளியிட்ட செய்தியில் கூறியதாவது,  “இந்த தாக்குதலில் 4 இராணுவ வீரர்கள் பலியாகினர் மற்றும் நோஸ்கி தாக்குதலில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பஞ்கரில் இராணுவ வீரர்களின் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்” என்று  குறிப்பிட்டிருந்தார். கடந்த வருடம் விடுதலைப் படை அமைப்பினர் நடத்திய  தாக்குதலில் 10 பாதுகாப்பு படை வீரர்கள் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |