சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிபாக்கம் பகுதியிலிருக்கும் ஏரிக்கரையோரம் இருந்த வேப்பமரம் திடீரென சாலையின் குறுக்கே முறிந்து விழுந்துள்ளது. இதனால் காவேரிப்பாக்கம்-பாணாவரம் சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த கட்டளை கிராம நிர்வாக அலுவலர் ரம்யா மற்றும் சாலை ஆய்வாளர் ஜானகிராமன் ஆகியோர் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டு பணியாளர்களை கொண்டு சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியை விரைவு படுத்தி போக்குவரத்தை சீரமைத்துள்ளனர்.