Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அனுமதி…. ரூ. 69,000 பறிமுதல்…. பறக்கும்படையினர் அதிரடி….!!

உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

நெருங்கி வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் வாக்குகளுக்கு பணம் கொடுப்பதை தடுக்க அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பறக்கும் படை அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இடுக்கியில் இருந்து அகமது சாலி என்பவர் ஓட்டி வந்த காரை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.69 ஆயிரம் இருப்பது தெரியவந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அகமது சாலியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |