தமிழகத்தில் கடந்த வருடம் ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி தினசரி 1 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இப்பணியை மேலும் தீவிரப்படுத்தும் அடிப்படையில் மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி, அதன்மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மேலும், 100 சதவீதம் நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி வாரந்தோறும் சனி (அ) ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. தற்போது வரையிலும் 20 மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் 21-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று (பிப்…5) நடைபெறுகிறது. காலை 9 -5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆகவே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.