Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்… “உலகம் முழுவதும் பதற்றம்”… வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா..!!

ஐ.நா.  பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களிடையே நடத்தபட்ட       வாக்கெடுப்பை   இந்தியா புறக்கணித்துள்ளது. 

உலகமுழுவதும் உக்ரைன் விவகாரத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டு வருகிறது.இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பது பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற வாக்களிப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. சுமார் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டு உள்ளதால் ரஷ்யா அந்த நாட்டை ஆக்கிரமிக்கும் என்ற பதற்றம் எழுந்துள்ளது.

ரஷ்யா இந்த பதற்றத்தை தணிப்பதற்காக நேற்று அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், கடந்த திங்கள் அன்று இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூடியது .எனினும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்த தேவை இல்லை என்று மறுத்தது. மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியது.

இதன் தொடர்ச்சியாக நடந்த வாக்கெடுப்பில் ரஷ்யா, சீனா ஆலோசனை கூட்டத்திற்கு எதிராகவும் மற்றும் அமெரிக்கா, நார்வே ,பிரான்ஸ், அயர்லாந்து, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகள் ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு ஆதரவாகவும் வாக்களித்தன. இந்த நிலையில் இந்தியா ,கென்யா, மேற்கு ஆப்பிரிக்க நாடான கபான் ஆகியவை வாக்களிப்பை புறக்கணித்துள்ளன.

அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே உக்ரைன் விவகாரத்தில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்தியாவுடனான உறவு பாதிக்கப்பட்டுள்ளதா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட்  பிரைஸ்,இந்தியாவுடன் எங்களுக்கு தனிப்பட்ட உறவு உள்ளதாகவும், அதனால் தனி தகுதிப்பாடுகளுடன்  நிலையாக  இருப்போம்  என பதில் அளித்துள்ளார். இது குறித்து மேலும் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Categories

Tech |