Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“வேட்புமனு தாக்கல்” ஒரே குடும்பத்தில் 3 பேர்…. தேர்தல் களத்தில் கடும் போட்டி….!!

அ.தி.மு.க சார்பாக ஒரே குடும்பத்தில் வசிக்கும் 3 பேர் நகராட்சி தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு நகராட்சியில் 30 வார்டுகள் இருக்கின்றது. இதில் அ.தி.மு.க சார்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 நபர்கள் போட்டியிடுகின்றனர். அதன்பின் முன்னாள் நகரசபை துணை தலைவரும் கட்சியின் மாவட்ட இணைச் செயலாளருமான கீதா 27-வது வார்டிலும், இவரின் கணவர் என். சுந்தர் 30-வது வார்டிலும் மற்றும் இவர்களது மகன் டாக்டர் பிரவீன்குமார் 14-வது வார்டிலும் போட்டியிடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து கீதா 2 முறை நகர் மன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நகரசபை துணை தலைவராகவும் மற்றும் அவரது கணவர் என். சுந்தர் ஒருமுறை நகர மன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |