Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! தடைகள் நீங்கும்..! சேர்க்கை உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்று மனதில் உற்சாகம் பிறக்கும்.

உறவினர்கள் உங்களுக்கு உதவிகளைச் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் தடைகள் விலகிச்செல்லும். விருந்து விழாவில் கலந்துக்கொண்டு மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். தேவையான அளவில் பணவரவு இருக்கும். பண விஷயத்தில் தேர்ந்தெடுத்து உதவிகளை செய்ய வேண்டும். தேவையற்ற வீண் குழப்பங்களுக்கு இடங்கொடுக்க வேண்டாம். பிடிவாத போக்கை மாற்றிக் கொள்ளுங்கள்.

நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சாதிக்கும் நாளாக இன்றையநாள் இருக்கும். மற்றவர்கள் உங்கள் பேச்சை கூர்ந்து கவனிக்கக்கூடும். கடன் பிரச்சினையில் இருந்தவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். மாணவர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் மிகவும் நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |