மீனம் ராசி அன்பர்களே..!
இன்று இனிய செய்திகள் உங்களின் இல்லம் தேடிவரும்.
உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். அனைவருக்கும் நீங்கள் உதவிகரமாக இருப்பீர்கள். நட்புடன் அன்பை வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்களிடமிருந்து உதவியும் கிடைக்கக்கூடும். பாக்கிகள் வசூலாகும். பகைவர்களின் தொல்லை விலகிச் செல்லும். புதிய நண்பர்களிடம் உங்களது கவனமாக இருங்கள். தொழில் ரகசியங்களை பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். மறைமுகப் போட்டிகள் விலகிச் செல்லும். நெருக்கடிகளை நீங்கள் சந்திக்கக்கூடும்.
இறைவனின் அருள் இன்று உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தன்னிச்சையாக முடிவு எடுப்பீர்கள். பிரச்சனைகளை சமாளித்து விடுவீர்கள். முன்னேற்றத்தை எளிமையாக ஈட்டி பெறுவீர்கள். நீங்கள் யாரையும் நம்பி இருக்க மாட்டீர்கள். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளஞ்சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறம்.