Categories
தேசிய செய்திகள்

மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்…. அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பள்ளி ,கல்லூரிகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய இணை சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும். அதோடு மாணவர்கள் பள்ளிகளில் 6 மீட்டர் இடைவெளி விட்டு அமர வைக்கப்பட வேண்டும்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள பெற்றோர்களின் ஒப்புதல் வேண்டுமா என்பதை மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .நேரடி வகுப்புகளில் மாணவர்களின் சிரமத்தை போக்க இணை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |