தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவின் மூன்றாவது அலை மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இதன் விளைவாக தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் கொண்டுவரப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ஆகியவை ரத்து செய்யப்பட்டன. அதோடு மாணவர்களுக்கு கடந்த 1-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. எனினும் இன்னும் இரண்டு வாரங்களுக்கு பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது. எனவே தேர்தலுக்கு பின்னர் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தேர்தலுக்காகவே மாநில அரசு ஊரடங்கை ரத்து செய்துள்ளது என பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.