Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

முடிந்தது வேட்புமனு தாக்கல் …. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…. பரபரப்பில் வேட்பாளர்கள்….!!

ஒரே நாளில் 486 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளிலும் இருக்கும் 126 வார்டுகளுக்கும் மற்றும் 3 பேரூராட்சிகளில் இருக்கும் 45 வார்டுகளுக்கும் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடப்பதை முன்னிட்டு இதற்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரே நாளில் மட்டும் 486 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனையடுத்து வேட்புமனு தாக்கல் செய்ய அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அரசியல் கட்சியினர் தங்களது ஆதரவாளர்களுடன் கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர். அப்போது அவர்களை நுழைவாயிலில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வேட்பாளர்களுடன் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதித்துள்ளனர்.

இதனால் பேருராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வெள்ளி கிழமை கடைசி நாள் என்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

Categories

Tech |