கோவிலின் கூட்ட நெரிசலில் வைத்து பெண்ணிடம் 5 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செட்டித் தெருவில் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நீலம்பாள் என்ற மனைவி உள்ளார். இவர் கோட்டாரில் இருக்கும் காளியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டதை பயன்படுத்தி சாமியை தரிசனம் செய்ய வந்த நீலம்பாளின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.