Categories
அரசியல்

நீட் விவகாரம்: “மீண்டும் அனைத்து கட்சி கூட்டம்….” ஒத்துழைப்பு தருமா பாஜக….!!

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் கே.என் ரவி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். எனவே இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மு.க ஸ்டாலின் வலியுறுத்தி வந்த நிலையில் தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப் படாமல் மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனையடுத்து மு.க ஸ்டாலின் நாளை மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளார். இதில் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக கலந்து கொள்ளுமா…? என்பது குறித்து சந்தேகம் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக எம்எல்ஏவும் மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் “அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது. தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவை என பேட்டி அளித்திருந்தார்.” ஏற்கனவே அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு அதில் கலந்து கொண்ட பாஜக பிரதிநிதி வானதி ஸ்ரீனிவாசன் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு “தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவை எனவும் இந்த தீர்மானத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எனவும் கூறி நாங்கள் வெளிநடப்பு செய்து விட்டோம்.” என அவர் பேட்டி அளித்திருந்தார்.

Categories

Tech |