Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய லாரி-பைக்…. வாலிபர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம்-லாரி நேருக்கு நேர் மோதியதில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்த நிலையில் தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சூரங்கோட்டை அருகே உள்ள மீனாட்சி புரத்தில் காந்தி என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ராமநாதபுரத்தில் 12ஆம் வகுப்பு படித்து வரும் இவர் கடந்த 1ஆம் தேதி தனது நண்பர்கள் மற்றும் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ராஜபாண்டி(23) ஆகிய 6 பேருடன் இருசக்கர வாகனத்தில்  கொடைக்கானலுக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து அங்கு சுற்றிப்பார்த்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் முதுனாள் விலக்கு சாலை அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மீது காந்தி ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் காந்தி மற்றும் ராஜபாண்டி பலத்தகாயம் அடைந்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மற்ற நண்பர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமத்தித்துள்ளனர். இதற்கிடையே லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மேலும் இதுகுறித்து காந்தி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவர் வண்ணாங்குண்டு பகுதியில் வசிக்கும் பாஸ்கரன் என்பவரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |