Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”… பயங்கரம்…. வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்… கேள்விக்குறியான பணியாளர்களின் நிலை…!!!!

நைஜீரிய நாட்டில் எண்ணெய் வயலில் நின்று கொண்டிருந்த கப்பல் திடீரென்று வெடித்து சிதறிய சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நைஜீரியா நாட்டில் உள்ள நைஜர் டெல்டா பகுதியில் இருக்கும் எண்ணெய் வயலில் ஷேபா ஆய்வு, சேமிப்பு , உற்பத்தி நிறுவனத்திற்குரிய மிதக்கும் எண்ணெய் உற்பத்தி மற்றும் இறக்கும் கப்பல் இருந்துள்ளது.

அந்த சமயத்தில், 2 மில்லியன் பீப்பாய்கள் அளவிற்கு எண்ணெய் சேமித்து வைக்கக்கூடிய திறனுடைய  டிரினிட்டி ஸ்பிரிட் என்ற கப்பல் நேற்று முன்தினம் காலையில் திடீரென்று  வெடித்துச் சிதறியது.

இதில், கப்பல் முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்நிலையில், கப்பலில் இருந்த பணியாளர்கள் 10 பேரின் நிலை என்ன? என்று தெரியவில்லை. மேலும், இந்த விபத்து ஏற்பட என்ன காரணம் என்றும் தெரியவில்லை. எனவே, அது தொடர்பான விசாரணை நடக்கிறது.

https://twitter.com/WorldDfenceNews/status/1489175758039752704

கப்பலில் தீப்பற்றி எரியும் வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

 

Categories

Tech |