அயர்லாந்தில் வசிக்கும் ஒரு பெண் தன் கணவரை விற்பதற்கு விளம்பரம் கொடுத்த நிலையில் அவரை வாங்குவதற்கும் 12 பெண்கள் தயாராக இருந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தில் வசிக்கும் ஜான் என்பவரின் மனைவி லிண்டா மெக்அலிஸ்டர். இவர்களுக்கு ரைடர் மற்றும் கோல்ட் ஆகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் லிண்டா திடீரென்று தன் கணவர் ஜானை இணையதளத்தில் விற்பனைக்கு ஏலம் விட்டிருக்கிறார். இதுகுறித்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதாவது, ஜான், தன் மகன்களை அழைத்து கொண்டு மீன் பிடிப்பதற்காக சென்றிருக்கிறார். அந்த சமயத்தில், இந்த பெண் இவ்வாறு விளம்பரம் செய்திருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, என் கணவர் ஜான், 6 அடி ஒரு அங்குலம் உடையவர்.
அவருக்கு 37 வயது. மீன் பிடிப்பதை அதிகம் விரும்புவார். அவர் ரொம்ப நல்லவர். அவருக்கு சரியாக உணவும், தண்ணீரும் கொடுத்தால் அதிக விசுவாசத்துடன் நடந்து கொள்வார். எனினும் அவருக்கு அதிக பயிற்சிகள் தேவை. எனக்கு அதற்கான பொறுமை மற்றும் நேரம் இல்லை. இந்த விற்பனை இறுதியானது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதுமட்டுமல்லாமல் ரிட்டன் மற்றும் எக்ஸ்சேன்ஜ் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர், பொழுதுபோக்கிற்காக இவ்வாறு பதிவிட்ட நிலையில், அதனை உண்மை என்று நம்பி சுமார் 12 பெண்கள் ஜானை வாங்குவதற்கு முயன்றிருக்கிறார்கள். ஜானின் நண்பர்கள் கூறிய பின்பே, அவருக்கு இந்த சம்பவம் தெரியவந்தது. அதன்பின், கணவன் மனைவி இருவரும் சேர்ந்து அதனை பார்த்து சிரித்திருக்கிறார்கள்.