Categories
மாநில செய்திகள்

“நகைக்கடன் தள்ளுபடி”… தமிழக அரசு திடீர் உத்தரவு….!!!!

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றால் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. அதன்படி திமுக ஆட்சி அமைத்த பிறகு கடந்த நவம்பர் மாதம் 21-ஆம் தேதி தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை வைக்கப்பட்டுள்ள நகை கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதாவது கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் உள்ளவர்களில் தகுதி உடையவர்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

மேலும் அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பான ஆய்வின் போது போலி நகைகளை வைத்து நகைக் கடன் பெற்றவர்கள் தொடர்பான விவரங்கள் கிடைத்துள்ளது. போலி நகைகளை வைத்து நகைக்கடன் பெற்றவர்கள், பல சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்கள் என தகுதியற்றவர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதி உடையவர்கள் யார்? என்பது தொடர்பான பட்டியலை தயாரிக்குமாறு கூட்டுறவு சங்கங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தகுதியுடையவர்கள் பட்டியலை தயாரிக்க துணை பதிவாளர் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு தயாரிக்கும் பட்டியலின் அடிப்படையில், யார் யாருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் ? என்பது தொடர்பான அனைத்து விவரங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |