Categories
தேசிய செய்திகள்

OMG: 4.28 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து….. மத்திய அரசு அதிரடி தகவல்…..!!!!!!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ​​மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே பேசினார். அப்போது அவர் கூறியது, “தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது விநியோக திட்டத்தை நடத்தும் பொறுப்பு மாநில அரசுகளையே சாரும். இதையடுத்து பயனாளிகளை காண்பது, ரேஷன் கார்டு வழங்குவது, ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது போன்றவையும் மாநில அரசின் பொறுப்பாகும்.

மேலும் தகுதியற்ற, போலி ரேஷன் கார்டுகளை ஒழிப்பதற்காக மாநில அரசுகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான 7 ஆண்டுகளில் 4 கோடியே 28 லட்சம் போலி ரேஷன் கார்டுகளை மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் ரத்து செய்துள்ளன. உத்தரபிரதேசத்தில் அதிக அளவாக 1 கோடியே 70 லட்சத்து 75 ஆயிரம் போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன” என்று கூறினார்..

Categories

Tech |