Categories
மாநில செய்திகள்

இலவச லேப்-டாப்கள் வழங்கப்படாதது ஏன் தெரியுமா?…. தமிழக அரசு அளித்த விளக்கம்…. இதோ?!!!!!

தமிழக அரசு சார்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச லேப்-டாப் இதுவரை கிட்டத்தட்ட 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நடப்பு கல்வி ஆண்டு மற்றும் கடந்த கல்வி ஆண்டில் இலவச லேப்-டாப்கள் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்த விசாரணையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறை அமலில் இருப்பதால் லேப்-டாப் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.

எனவே லேப்-டாப்கள் மற்றும் கணிப்பொறிகளை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களுடைய லாபமும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் கணினி தயாரிப்பு நிறுவனங்களை தமிழக அரசு இலவச லேப்-டாப்கள் தயாரிக்க அழைப்பு விடுத்த போது டெண்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை என்று தெரியவந்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் மிக குறைந்த விலையில் தமிழக அரசு வழங்க கூடிய லேப்-டாப்கள் தயாரிக்கப்படும். ஆனால் அந்த லேப்டாப்கள் சந்தைகளுக்கு அனுப்பப்படும் போது 30 ஆயிரத்துக்கும் மேல் விற்பனையாகும்.

எனவே தான் கணினி தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா கால கட்டத்தை பயன்படுத்தி லேப்-டாப்களை அதிக விலைக்கு விற்க விரும்புகின்றனர். இதன் காரணமாகவே இலவச லேப்-டாப்களை மாணவர்களுக்கு வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இலவச லேப்-டாப்களை மாணவர்களுக்கு விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |