ரஷிய மற்றும் சீனா அதிபர்கள் இருவரும் பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி விழாவிற்கு முன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் ரஷ்ய படைகள் உக்ரேன் மீது தாக்குதல் நடத்த தயாராக இருப்பதால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து நேற்று சீன அதிபர் ஜின்பிங்கை, ரஷ்ய அதிபர் புதின் சந்தித்து பேசினார். கொரோனா தொற்று தொடங்கியதற்கு பிறகு அதிபர் ஜின்பிங் நாட்டை விட்டு வெளியே செல்வதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் ஜின்பிங் வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து பேசியது இதுவே முதல் முறையாகும். அதேபோல் மற்ற தலைவர்களும் சீன நாட்டிற்கு வருவதில்லை.
இதனைத்தொடர்ந்து பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட சீன அதிபரை நேற்று ரஷ்ய அதிபர் புதின் மற்றும் மற்ற நாட்டு தலைவர்கள் பலரும் சந்தித்தனர். பெய்ஜிங்கில் ரஷிய மற்றும் சீன அதிபர்கள் இருவரும் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவிற்கு முன்பு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உக்ரைன் பிரச்சினை, இருநாட்டு ஒற்றுமையை அதிகரிப்பது மற்றும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து பேசினார்கள்.
இதற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த புதின். “சீனாவும், ரஷ்யாவும் மதிப்புக்குரிய உறவுக்கு எடுத்துக்காட்டு, சீனாவுடனான ரஷ்யாவின் உறவுகள் தோழமை மற்றும் மூலோபாய குறிக்கோள்களுடன் வளர்ந்து வருகின்றனர். எனக்கு அதிபர் ஜின்பிங்கை பல வருடங்களாக தெரியும் நாங்கள் இருவரும் உலகப் பிரச்சனைகளை தீர்ப்பதில் பல பொதுவான சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளும் நல்ல தோழர்கள் மற்றும் அரசியல்வாதிகள். மேலும் நாங்கள் இருவரும் எப்பொழுதும் நெருங்கிய தொடர்புடன் இருந்து வருகிறோம்” என்று கூறினார்.