முதுநிலைக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பு மத்திய சுகாதாரத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அளவில் சமீப வருடங்களாக இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது, நீட் தேர்வு மூலமாகத்தான் நடக்கிறது. அந்த வகையில், இந்த வருடம் முதுநிலைக்கான நீட் தேர்வு, வரும் மார்ச் மாதம் 12ஆம் தேதி அன்று நடக்கவுள்ளதாக முன்பே அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், மருத்துவ அறிவியல் தேர்வுகளுக்கான தேசிய வாரியமானது, முதுநிலைக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 21ஆம் தேதி அன்று நடக்கும் என்று அறிவித்திருக்கிறது. www.exam.natboard.edu.in என்ற இணையதளத்தின் மூலம் வரும் மார்ச் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, வரும் மே மாதம் 16ம் தேதி அன்று ஹால் டிக்கெட் வெளிவரும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஜூன் மாதம் 20-ஆம் தேதி அன்று முடிவுகள் வெளியாகும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.