Categories
தேசிய செய்திகள்

“10 நாட்களுக்குள்” கொரோனா இழப்பீடு…. உச்சநீதிமன்றம் சூப்பர் உத்தரவு…!!!!

மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதற்காக தனி அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்க கோரி, கவுரவ் பன்சால்  என்பவர் மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த விசாரணையின்போது  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் இழப்பீடு வழங்குவதாகவும் மற்றும்  மாநில அரசுகளும் இந்த இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டது .

நீதிபதிகள் ஷா, நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. இந்த விசாரணையில் கொரோனாவால்  இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்குவதை கண்காணிப்பதற்காக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தனி அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் மாநில சட்ட சேவை ஆணையத்துடன் இந்த  அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு இழப்பீடு சரியாக வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பெயர், முகவரி மற்றும் இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவற்றை  மாநில சட்ட சேவை ஆணையத்திடம்  ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தில் ஆதரவற்றவர்கள் பட்டியலையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இதை தவறினால் அந்த அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் தொழில்நுட்ப காரணங்களைக் கூறி இழப்பீடு கேட்டு வரும்  மனுக்களை நிராகரிக்க கூடாது.தவறு இருக்கும் பட்சத்தில் அதை திருத்தி புது மனுத்தாக்கல் செய்ய வாய்ப்பு அளிப்பதோடு மட்டுமல்லாமல் இழப்பீடு வழங்குவதை 10 நாட்களுக்குள் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Categories

Tech |