மகேஸ்வரி தனது இரண்டாவது திருமணம் குறித்து பேசியுள்ளார்.
சின்னத்திரையில் நிறைய தொகுப்பாளினிகள் உள்ளனர். அதில் ரசிகர்களால் மிகவும் கவனிக்கப்பட்ட தொகுப்பாளர்களில் ஒருவர் மகேஸ்வரி. இவர் தற்போது பிசியாக படங்களிலும் நடித்து வருகிறார். இதனயடுத்து, இவர் விக்ரம், மகான், சாணிக்காகிதம் போன்ற திரைப்படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.
மேலும், சமீபத்தில் இவர் நடிப்பில் ரைட்டர் திரைப்படமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது இரண்டாவது திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில் ”பத்து வருடத்திற்கு மேலாக நான் சிங்கிளா தான் இருக்கிறேன். ஒரு கட்டத்தில் இதுதான் நம் தலையெழுத்து என நினைத்துக் கொள்வேன்” என கூறியுள்ளார். மேலும், ”இரண்டாம் திருமணம் குறித்து பயம் எனக்கு அதிகமாக இருக்கிறது. அதே சமயம் அந்த திருமணம் நீண்ட நாள் நீடிக்குமா என்ற பயமும் இருக்கிறது” என கூறியுள்ளார்.