நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கேள்வி நேரத்தின்போது எம்பி ஒருவர் “இந்தியாவில் தனிநபர் ஒருவர் வெவ்வேறு இடங்களில் ரேஷன் கார்டு வைத்திருப்பதை மத்திய அரசு கண்டறிந்துள்ளதா.? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய நுகர்வோர் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் தகுதியற்ற ரேஷன் அட்டைகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 4.28 கோடி ரேஷன் அட்டைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் இதுவரை 3.04 லட்சம் ரேஷன் அட்டைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன எனவும் அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1.7 கோடி ரேஷன் அட்டைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். போலி ரேஷன் அட்டை உபயோகத்தில் உத்திரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.