ஆன்லைனில் பணம் அனுப்பும் போது நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் பெரிய பண இழப்பு ஏற்பட நேரிடும். இதனை தவிர்ப்பதற்காக மொபைல் எண் மற்றும் UPI ஐடியை நிரப்பும் போது கவனமாக இருக்க வேண்டும். அதாவது ஒரு முறைக்கு இருமுறை நாம் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். IFSC எண்ணை பதிவிடும்போது நாம் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். இல்லையென்றால் வேறு ஒருவர் கணக்கிற்கு பணம் செல்ல நேரிடும். பணம் அனுப்புவதற்கு தான் QR ஸ்கேன் செய்ய தேவை ஏற்படலாம். ஆனால் பணத்தை பெற QR ஸ்கேன் செய்ய தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Categories