Categories
தேசிய செய்திகள்

OMG : போலி ரேஷன் கார்டுகள்…. முதலிடத்தில் உள்ள மாநிலம் இதுதானா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று மாநிலங்களவையில் எம்பி ஒருவர், இந்தியாவில் போலி ரேஷன் கார்டுகள் அதிகம் புழக்கத்தில் இருப்பதை மத்திய அரசு கண்டறிந்துள்ளதா ? என்று கேள்வி கேட்டார். அதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய நுகர்வோர் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் தகுதியற்ற மற்றும் போலியான ரேஷன் அட்டைதாரர்களை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 2014-21-ஆம் ஆண்டு வரை தகுதியற்ற 4.28 கோடி ரேஷன் அட்டை கணக்குகள் நீக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை 3.04 லட்சம் ரேஷன் அட்டைகள் தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யபட்டுள்ளது. அதேபோல் அதிகபட்சமாக 1.77 கோடி ரேஷன் அட்டைகள் உத்தரபிரதேச மாநிலத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே அதிக போலி ரேஷன் கார்டுகள் உத்தரபிரதேசத்தில் தான் உள்ளது. எனவே இந்தியாவில் போலி ரேஷன் கார்டுகள் அதிகமுள்ள மாநிலங்களில் முதலிடத்தில் உத்தரப் பிரதேசம் உள்ளது என்பதை நாடாளுமன்றத்தில் மத்திய அரசே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |