போர்ட்-ஆக்ஸ்-பிராங்காயிஸ்க்கு கிழக்கே திடீரென ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
அண்டார்டிகாவின் நிலப்பகுதி மற்றும் பிரெஞ்சு தெற்கு பகுதியில் உள்ள போர்ட்-ஆக்ஸ்-பிராங்காயிஸ் பகுதிக்கு கிழக்கே 2,152 கிலோமீட்டர் தூரத்தில் இன்று காலை 1.55 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் பீதியடைந்த மக்கள் வீதியில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.