நீட் தேர்வு குறித்து கோரிக்கை மனு ஒன்றை தமிழக அரசு கவர்னருக்கு அனுப்பி வைத்தது. அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் திருப்பி அனுப்பி வைத்தார் கவர்னர். இதற்க்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கவிஞர் வைரமுத்து அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அனைவராலும் குரல் எழுப்பப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் சம்மதத்தோடு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கை மனுவின் மீது நடவடிக்கை எடுக்காமல் அதை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்தார் கவர்னர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கவிஞர் வைரமுத்து அவர்கள் இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில் திருப்பி அனுப்புவது ராஜ்பவனின் மேட்டிமை மீண்டும் அனுப்புவது சட்டமன்றத்தின் உரிமை. இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டம் அனைத்துக் கட்சியின் முடிவை ராஜ்பவனும் ஜனாதிபதி மாளிகையும் மட்டு மல்ல இருள் கட்டிக்கிடக்கும் ஏழைக்குடிகளின் ஓலைக் குடிசைகளும் கண்ணில் நீரோடு கவனிக்கின்றன இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.