Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வயிற்று வலியில் துடித்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி …. போலீஸ் விசாரணை….!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து மீண்டும் வயிற்று வலி  ஏற்பட்டபோது மனஉளைச்சலின்  முருகேசன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகேசனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |