Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“காணாமல் போன லாரி” 2 மணி நேரத்தில் கண்டுபிடிப்பு…. அதிகாரிகளின் பாராட்டு….!!

காணாமல் போன லாரியை 2 மணி நேரத்தில் கண்டுபிடித்த காவல்துறையினரை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உத்திரம்பட்டு கிராமத்தில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜேஷ் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருக்கும் கார் தயாரிக்கும் நிறுவனத்தில் உதிரிபாகங்களை ஏற்றுவதற்காக ஆந்திராவிலிருந்து லாரியை ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். அப்போது ஓச்சேரி பேருந்து நிறுத்தம் அருகாமையில் லாரியை நிறுத்தி விட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டில் இருந்து வெளியில் வந்து பார்த்த போது ஓட்டி வந்த லாரி காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக ராஜேஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் லாரியை தேடி ஒரு காரில் சென்னை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர். அப்போது இருங்காட்டுக்கோட்டை அருகாமையில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது லாரியை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து லாரியை திருடி வந்த ஓட்டுனரிடம் விசாரணை நடத்தியதில் அவர் வாசிம் நகரில் வசிக்கும் செல்வம் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லாரியை திருடி வந்த செல்வத்தை கைது செய்துள்ளனர். மேலும் காணாமல் போன லாரியை 2 மணி நேரத்தில் கண்டுபிடித்த காவல்துறையினர்களை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |