Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. புதிய பரபரப்பு புகார்….!!!!

கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடி பெற்ற மக்களுக்கு சான்று அளிக்கவிருப்பதாக வெளியான சுற்றறிக்கை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரைக்கும் வைக்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். இதற்குரிய அரசாணைகள் கடந்த 2021 ஆம் வருடத்தின் நவம்பர் மாதம் முதல் தேதியன்று வெளியானது.

மேலும் இந்த நகை கடன் தள்ளுபடியானது பல நிபந்தனைகளுக்குட்பட்டு தான் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அதன்படி 13 லட்சம் மக்கள் மட்டும் நகை கடன் தள்ளுபடி சலுகை பெற முடியும் என்றும் 35 லட்சம் மக்களும் பெற முடியாது என்றும்  தெரிவிக்கப்பட்டது.

மேலும் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் குறித்த பணிகள் நிறைவடைந்தது. இந்நிலையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட மக்களுக்கு நகையும் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழும் கொடுக்கப்படவில்லை என்று வங்கிகளுக்கு சென்று வாக்குவாதம் செய்ய தொடங்கினர். இந்நிலையில் வரும் 19ஆம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கிறது.

எனவே கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கடந்த வியாழக்கிழமை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். அதில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கொண்ட குழுவானது, வரும் 11ம் தேதிக்குள் நகை கடன் பெற தகுதி உடைய, தகுதியற்ற மக்களின் பட்டியலை சங்கங்களுக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ், வடிவம், நிறம் மற்றும் வாசகம் மாறாமல் குறிப்பிட்ட அளவிற்கு அச்சடிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் நிறைவடைந்த பின் தள்ளுபடிக்கான சான்றிதழ் மக்களுக்கு கொடுப்பதற்கான நாள்,  நடைமுறைகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சுற்றறிக்கை தொடர்பில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள், வாக்காளர்களிடம் ஆசை காட்டுவது போன்று இருக்கிறது. எனவே, தேர்தல் விதிமுறையை மீறியதாக கூறி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, மாநில தேர்தல் ஆணையத்திற்கு புகார் தெரிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.

Categories

Tech |