ஆஸ்திரேலியா தூதரகத்தில் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா தூதரகம் தாய்லாந்து நகரிலுள்ள பாங்காங்கில் அமைந்துள்ளது. இந்த தூதரகத்தில் பெண்கள் கழிவறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய தூதரகத்தின் முன்னால் பணியாளர் ராயல் தாய் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அவரை கடந்த மாதம் கைது செய்திருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து வெளிவுறவு துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், தங்களுக்கு அனைத்து ஊழியர்களின் நலன் மற்றும் தனியுரிமையே முக்கியம் என்றும் அதற்கு தேவையான ஆதரவைத் தொடர்ந்து அளிப்போம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து தாய்லாந்து காவல்துறையின் வெளியுறவு பிரிவு தளபதி கெமரின் ஹசிரி கூறுகையில், ரகசிய கேமரா பொருத்தப்பட்டதினால் ஆஸ்திரேலியா தூதரகம் அந்த நபர் மீது ஜனவரி 6-ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளார். இந்த ரகசிய கேமராக்கள் எவ்வளவு நாள் பொருத்தப்பட்டிருந்தது என்பது தெளிவாக தெரியவில்லை. கடந்த ஆண்டு கழிப்பறையில் எஸ்டி கார்டு தரையிலிருந்தததை கண்டுபிடித்த பிறகுதான் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடி நடந்திருக்கிறது என்பது தெரியவந்துள்ளது என ஆஸ்திரேலியா பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை நிபுணர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஆஸ்திரேலிய பல்கலைகழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் இதுகுறித்து பேசுகையில், ஊழியர்களின் தனிப்பட்ட பகுதிக்குள் ரகசிய கேமராக்கள் அனுமதித்திருப்பது அங்கு பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டிருப்பது தெளிவாகிறது. மேலும் ஆஸ்திரேலிய தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தபடவில்லை என்பதாகத்தான் கூற வேண்டும் என கூறினார்.