Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அத்து மீறி நுழைந்த மர்ம நபர்கள்…. முதியவருக்கு கத்தி குத்து…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

முதியவரை கத்தியால் குத்தி விட்டு தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொல்ல கொட்டாய் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவியும், கல்யாணி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கல்யாணி மகனுர்பட்டிப்பள்ளியில் வசிக்கும் சக்திவேல் என்பவரை திருமணம் செய்துள்ளார். அதன்பின் 2 நாட்களுக்கு முன்பாக கல்யாணி தனது பெற்றோரை பார்ப்பதற்காக குரும்பேரி பகுதிக்கு வந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த 4 மர்ம நபர்கள் குப்புசாமியிடம் பணம் கேட்டு மிரட்டிய போது அவர் தன்னிடம் எதுவும் இல்லை என கூறியுள்ளார். இதில் கோபமடைந்த மர்ம நபரில் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குப்புசாமியை லேசாக குத்தியுள்ளார்.

இதைப் பார்த்து பயந்து போன சரோஜா மற்றும் மகள் கல்யாணி ஆகியோர் தான் அணிந்திருந்த 4 பவுன் நகைகளை கழற்றி மர்மநபர்களிடம் கொடுத்துள்ளனர். பின்னர் பீரோவில் வைத்திருந்த 5,000 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 2 செல்போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதற்குப் பிறகு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குப்புசாமியை மீட்டு அவரின் மனைவி மற்றும் மகள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இது பற்றி குப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |