தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பார்வையாளர் பிரதீப்குமார் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரதீப்குமார் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்துள்ளார். அப்போது வேட்புமனு பெறப்படும் அறைகள், அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் மற்றும் பதிவு செய்யப்பட்டிருக்கும் பதிவேடுகள் ஆகியவற்றைச் சரிபார்த்து அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார்.
இதனையடுத்து நகராட்சியில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட அறைகளில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் இருந்தால் அவர்களை விசாரித்து வேட்பாளர்களுடன் ஒருவர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து நிபுணர்களிடம் கூறும் போது, இம்மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அனைவரும் முககவசம் அணிய வேண்டும் எனவும், அரசு வழிகாட்டுதலின் படி நடந்து கொள்ள வேண்டுமாறும் அவர் கூறியுள்ளார்.