ஒரே நாளில் 794 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வருகின்ற 19-ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் இம்மாவட்டத்தில் இதுவரை 291 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனை அடுத்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் முடிவடைய போவதால் ஒரே நாளில் 794 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.