Categories
உலக செய்திகள்

உயிருக்கு போராடும் சிறுவன்…. தவிக்கும் பெற்றோர்…. தீவிர பணியில் மீட்பு குழுவினர்….!!!

ராயன் என்ற 5 வயது சிறுவன் ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடி வருவது மிகுந்த சோகத்தை எற்படுத்தயுள்ளது.

மொரோக்கோ எனும் நாட்டில் ராயன் என்ற 5 வயது சிறுவன் ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். இந்த சிறுவன் 104 அடி ஆழத்தில் 4 நாட்களாக சிக்கியுள்ளான். இச்சிறுவனை மீட்கும் பணியில் ஆழ்துளை கிணறு அருகே மீட்புக்குழுவினர் குழியைத் தோண்டி அச்சிறுவனை நெருங்கி உள்ளனர்.மேலும் அந்த சிறுவன் 25 சென்டி மீட்டர் விட்டமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் விழுந்ததை அறிந்த பெற்றோர் ஊர் மக்களுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனைதொடர்ந்து மீட்பு குழுவினர் கேமராவை செலுத்தியதில் சிறுவனின் தலையில் லேசான காயம் ஏற்பட்டு இருப்பதும், அவர் தன் உணர்வுடன் இருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் ஆக்சிஜன் குழாய், உணவு, நீர் ஆகியவற்றை கயிறு மூலம் இறக்கியுள்ளனர். இந்நிலையில் மீட்புக்குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் 35 மீட்டர் ஆழத்துக்கு ஒரு பெரிய குழி ஒன்று தோண்டி அதன் பக்கவாட்டில் துளையிட உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் நிலம் சரியும் அபாயம் உள்ளதால் மீட்புக்குழுவினர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.அத்துடன் அங்கு மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.  மேலும் அந்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒரு ஹெலிகாப்டரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |