தமிழகத்தில் அரசு அலுவலகங்களிலுள்ள காலிப்பணியிடங்களை அரசு தேர்வாணையம் வாயிலாக நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இந்த வருடத்துக்கான தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையமானது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதமும், குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குருப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அடுத்த 75 நாட்களில் தேர்வு நடத்தப்படும்.
அதனை தொடர்ந்து அரசு துறைகளில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு பதவி உயர்வுக்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி கொண்டிருக்கிறது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது, தற்போது TNPSC தேர்வாணையம் துறை தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். மேலும் தற்போது டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஒரு முறை நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு கால அவகாசமாக வரும் பிப்… 28ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதுவரையிலும் அரசு போட்டி தேர்வுகள் காலை 10 மணி முதல் 1 வரையும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் நடைபெறும். தற்போது தமிழ் மொழி தகுதி தேர்வு நடத்தப்படுவதால் தேர்வு நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே இனி வரும் காலங்களில் தேர்வு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மற்றும் மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் எழுத்து தேர்வு நடைபெறும். இதில் குரூப்-4 தேர்வில் தமிழ் மொழி தேர்வு கொள்குறி வகையிலும், பிற தேர்வுகளில் விரிவாக விளக்கும் வகையிலும் கேட்கப்படும். இந்த தமிழ் தேர்வில் 40 மதிப்பெண்கள் கட்டாயம் எடுக்க வேண்டும். அதன்பின் கூடுதலாக எடுக்கப்பட்ட மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் கணக்கிடும்போது எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.