சென்னை மயிலாப்பூர் ஆர்.கே மடம் சாலையில் பிளாட்பாரத்தில் ஐந்து பேர் பிச்சை எடுத்துவருகின்றனர். இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே பிச்சை எடுக்கும் நான்கு பேர்களுக்குள் மது குடிப்பதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் மூன்று பேர் சேர்ந்து ஒருவரை அடித்துள்ளனர். அதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபரை தாக்கிய பிச்சை எடுப்பவர்களான இயேசு ராஜ் (29), கார்த்திக் (30) ஆகிய இருவரை மயிலாப்பூர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.