Categories
உலக செய்திகள்

குளிர்கால ஒலிம்பிக் போட்டி…. இருளையே பகலாக மாற்றிய வர்ணஜாலம்…. கோலாகலத்தில் பிரபல நாடு….!!!

குளிர்கால ஒலிம்பிக் போட்டியை வான வேடிக்கையுடன் சீன அதிபர் ஷி ஜின்பிங் கோலாகலமாக தொடங்கி வைத்தார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கியது. இந்த ஒலிம்பிக் போட்டி கண்கவர் வாணவேடிக்கையுடன் தொடங்கப்பட்டது. ரஷ்யா, சீனா உள்ளிட்ட 22 நாடுகளின் தலைவர்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கு கொண்டனர். மேலும் 91 நாடுகளை சேர்ந்த 2875 வீரர்-வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து ராட்சத ஐஸ் கட்டியில் வண்ண ஒளி விளக்குகளை ஒளிர விட்டு கலை விருந்து நிகழ்த்தப்பட்டது. இந்தத் தொடக்க விழாவை சீன அதிபர் ஷி ஜின்பிங் தொடங்கி வைத்தார். குளிர்கால ஒலிம்பிக் ஜோதியை இரண்டு ஒலிம்பிக் வீரர்கள் ஏற்றினார்கள். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இருளையே பகலாக மாற்றும் அளவிற்கு வான வேடிக்கைகள் விண்ணில் வர்ணஜாலம் காட்டும் அளவிற்கு நிகழ்த்தப்பட்டது.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் 91 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் தங்கள் நாட்டு தேசிய கொடியை கையில் ஏந்தி அணிவகுத்தனர். உக்ரேன் வீரர்கள் அணிவகுத்து வரும்போது ரஷ்ய அதிபர் புதின் லோசாக் அவர்களை கண்டுகொள்ளாமல் கண் அயர்ந்தார். இதனால் சமூக வலைத்தளங்களில் ரஷ்ய அதிபரை விமர்சித்து வருகின்றனர். மேலும் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் ஒரே ஒரு வீரரான முகமது ஆரிப் கான் அணிவகுப்பில் இந்திய நாட்டு கொடியை கையில் ஏந்திச் சென்றார். இதனை தொடர்ந்து குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்கவிழாவில் கலந்து கொள்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் அரங்கின் வெளியே திரண்டு வான வேடிக்கைகளை கண்டு மகிழ்ந்தனர்.

Categories

Tech |