Categories
தேசிய செய்திகள்

இது புதுசா இருக்கே…! “டிராபிக்கால் தான் விவாகரத்து” முன்னாள் முதல்வர் மனைவி குற்றச்சாட்டு….!!!

மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரின் மனைவி போக்குவரத்து நெரிசலால் விவாகரத்து ஏற்படுவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மகராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர் தேவேந்திர பட்னாவிஸ். இவருடைய மனைவி அம்ருதா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நான் முன்னாள் முதல்வரின் மனைவி என்பதை மறந்து ஒரு பெண்ணாக உங்களிடம் பேசுகிறேன் என்று கூறினார்.

மும்பை மாநகரில் தினசரி ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் தங்களின் குடும்பங்களுக்காக மக்கள் நேரம் ஒதுக்க முடிவதில்லை. இதனால் சுமார் மூன்று சதவீத குடும்பங்களில் விவாகரத்து ஏற்படுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து தொடர்பாக சிவசேனா தலைவர்களில் ஒருவரான பிரியங்கா சதுர்வேதி கிண்டலாக டுவிட்டரில், போக்குவரத்து நெரிசல் காரணமாக 3% மும்பை மக்கள் விவாகரத்து செய்கிறார்கள் எனக் கூறிய இந்த பெண்ணுக்கு இந்நாளில் சிறந்த லாஜிக் விருதை வழங்க வேண்டும். மேலும் இதனை படிப்பதை மும்பை குடும்பங்கள் தவிர்க்கவும். இதனால் உங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடும் என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |