பொலிவியாவின் தலைநகரில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொலிவியாவின் தலைநகரான லா பாஸில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த கடுமையான இயற்கை சீற்றத்தால் தலைநகரில் வசித்து வரும் 65,000 குடும்பங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலச்சரிவு மற்றும் மலைப்பகுதிகளிலிருந்து உருண்டு வந்த பாறை போன்றவற்றால் அங்கிருக்கும் வீடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசித்து வரும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமாகியுள்ளது.