சட்டவிரோதமாக ஆட்டோவில் கடத்தி வந்த 75 மூட்டை ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி ரத்தினவேல் தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக 75 மூட்டை ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஆட்டோவில் இருந்த 75 மூட்டை ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநரான அஜய் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.