Categories
உலக செய்திகள்

புதிய உச்சம்: “பிரபல நாட்டை” கதிகலங்க வைக்கும் “கொரோனா”…. பீதியில் மக்கள்…. அதிகரிக்கும் உயிரிழப்பு….!!

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் புதிய உச்சமாக 9,00,000 யும் கடந்துள்ளது.

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த தொற்றை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்கள்.

இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் புதிய உச்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,00,000 யும் தாண்டியுள்ளது.

இதனையடுத்து சராசரியாக நாளொன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 2,500 ஆக உள்ளது இதற்கிடையே அமெரிக்காவில் 60% மக்கள் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியினை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளார்கள்.

இந்த நிலவரத்தை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாததே உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக அமைகிறது என்று தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |