ஸ்னாப்ஷாட் என்ற செயலியை உபயோகிக்கும் பயனர்களின் தினசரி எண்ணிக்கையானது, 319 மில்லியனை தாண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் தடவையாக ஸ்னாப் சாட் நிறுவனமானது லாபம் ஈட்டுவதற்கு தொடங்கியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஸ்னாப் சாட் நிறுவனம், தமிழ் உள்பட சுமார் 37 மொழிகளில் பயனர்களை கொண்டிருக்கிறது.
மேலும் இந்நிறுவனம் கடந்த வருடத்தில் நிலையான வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த வருடத்தின் இறுதியில் 42% அதிக லாபம் பெற்றிருப்பதாக தெரிவித்திருக்கிறது. மேலும், கடந்த 2021-ஆம் வருடம் தங்களுக்கு சிறந்த வருடமாக அமைந்தது என்றும் நிலையான வளர்ச்சியை அடைந்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், ஸ்னாப் நிறுவன தலைமை செயல் அதிகாரியான Evan Spiegel, ஆக்மென்டட் ரியாலிட்டியில் முதலீடு செய்ததால், எங்களுக்கு கிடைத்த பலன் இது என்று கூறியிருக்கிறார்.