சிறப்பாக பணியாற்றிய வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பரிசுகளை வழங்கியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் மங்கலராமசுப்பிரமணியன், சப்- கலெக்டர் பிரித்திவிராஜ், வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பட்டா மாறுதல் மனு பிரிவு , கள ஆய்வு பிரிவு, உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றி அதிகாரிகளான சீதாலட்சுமி, சின்னதுரை, துணை வட்டாட்சியர் களான சரவணகுமார், பாலமுருகன், தனராஜ், ராமச்சந்திரன், ராஜகுமார், ஆனந்தராஜ், பாண்டிச்செல்வி உள்ளிட்ட பலருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கியுள்ளார்.